Kalyana Malai Song Lyrics in Tamil

Kalyana Malai Song Lyrics in Tamil from Pudhu Pudhu Arthangal. Kalyana Malai or Kalyanamalai Kondadum Penne Song Lyrics has penned by Vaali.

படத்தின் பெயர்:புதுப்புது அர்த்தங்கள்
வருடம்:1989
பாடலின் பெயர்:கல்யாண மாலை
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்:S.P.பாலசுப்ரமணியம்

Kalyana Malai Lyrics in Tamil

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண்: சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண்: வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

ஆண்: அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண்: நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை
பாடுமே தோடி

ஆண்: சந்தோஷ சாம்ராஜ்யமே

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண்: சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண்: கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

ஆண்: நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே

ஆண்: துக்கம் சில நேரம்
பொங்கி வரும்போதும்
மக்கள் மனம்போலே
பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண்: சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே

ஆண்: கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்

Kalyanamalai Kondadum Penne Song Lyrics

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

Suruthiyodu Layam Polave
Inaiyaagum Thunaiyaagum
Samsaara Sangeedhame

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

Vaalibangal Odum
Vayadhaaga Koodum
Aanaalum Anbu
Maaraadhathu

Maalaiyidum Sondham
Mudipotta Bandham
Pirivennum Solle
Ariyaadhathu

Azhagana Manaivi
Anbana Thunaivi
Amaindhaalae Perinbame

Madimeedhu Thuyila
Sarasangal Payila
Moghangal Aarambame

Nalla Manaiyaalin
Nesam Oru Kodi
Nenjamenum Veenai
Paadumae Thodi
Sandhoosha Samrajyame

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

Suruthiyodu Layam Polave
Inaiyaagum Thunaiyaagum
Samsaara Sangeedhame

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

Koovugindra Kuyilai
Koottukkul Vaithu
Paadendru Sonnaal
Paadaadhamaa

Solaimayil Thannai
Siraivaithu Pootti
Aadendru Sonnaal
Aadaadhamaa

Naaldhorum Rasigan
Paarattum Kalainjan
Kaavalgal Enakillaiye

Sogangal Enakum
Nenjodu Irukkum
Sirikaadha Naalillaiye

Thukkam Sila Neram
Pongivarum Podhum
Makkal Manampole
Paaduven Kanne
En Sogham Ennodudhaan

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

Suruthiyodu Layam Polave
Inaiyaagum Thunaiyaagum
Samsaara Sangeedhame

Kalyaana Maalai
Kondaadum Penne
En Paattai Kelu
Unmaigal Sonnen

பாடலின் குறிப்பு

கல்யாணமலை பாடலானது புது புது அர்த்தங்கள் என்னும் தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தினை 1989 ஆம் ஆண்டு K பாலச்சந்தர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஹ்மான் மற்றும் கீதா முக்கிய வேடங்களிலும் சௌகார் ஜானகி, ஜெயசித்ரா, ஜனகராஜ் மற்றும் சித்தாரா ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் பற்றி அறிந்து கொள்ள Wikipedia.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *