Kalvare Kalvare Song Lyrics in Tamil from Ravanan Movie. Kalvare Kalvare Song Lyrics has penned in Tamil by Vairamuthu. Kalvare Tamil Lyrics
| படத்தின் பெயர்: | ராவணன் |
|---|---|
| வருடம்: | 2010 |
| பாடலின் பெயர்: | கள்வரே கள்வரே |
| இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
| பாடலாசிரியர்: | வைரமுத்து |
| பாடகர்கள்: | ஸ்ரேயா கோஷல் |
பாடல் வரிகள்:
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ
வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே
உடை களைவீரோ உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகின்றதா
