Akkam Pakkam Yarumilla Song Lyrics in Tamil from Kireedam Movie. Akkam Pakkam Yarumilla Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | கிரீடம் |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | அக்கம் பக்கம் யாருமில்லா |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | ஷாதனா சர்கம் |
பாடல் வரிகள்:
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து தான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்து கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை
தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்