Mazhai Varum Arikuri Song Lyrics in Tamil

Mazhai Varum Arikuri Song Lyrics in Tamil from Veppam Movie. Mazhai Varum Arikuri Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:வெப்பம்
வருடம்:2011
பாடலின் பெயர்:மழை வரும் அறிகுறி
இசையமைப்பாளர்:ஜோஷுவா ஸ்ரீதர்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ஸுசன்னே டீ’மெல்லோ

பாடல் வரிகள்:

மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ

உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி பார்க்கிறது

உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று
என்னை கேட்ட பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ

அறியாதொரு வயதில் விதைத்தது
அதுவாகவே தானாய் வளர்ந்தது
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்
அட யாரதை யாரதை பறித்தது

உன் கால்தடம் சென்ற வழி
பார்த்து நானும் வந்தேன்
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள்
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்
நான் கேட்டது வானவில் மாயங்கள்
யார் தந்தது வழிகளில் காயங்கள்

இந்த காதலும் ஒரு வகை
சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா

மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ

உன் தோளில் சாயும் போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி பார்க்கிறது

உன்னோடு போகும் போது
பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று
என்னை கேட்ட பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா

பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *