Un Pere Theriyathu Song Lyrics in Tamil

Un Pere Theriyathu Song Lyrics in Tamil from Engeyum Eppothum Movie. Un Pere Theriyathu Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:எங்கேயும் எப்போதும்
வருடம்:2011
பாடலின் பெயர்:உன் பேரே தெரியாத
இசையமைப்பாளர்:C சத்யா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:மதுஸ்ரீ, சுதாரகுநாதன்

பாடல் வரிகள்:

உன் பேரே தெரியாத
உன்னை கூப்பிட முடியாத
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது

அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒருமுறை சொன்னாலே
தூக்கம் வாராது

அட தினம்தோறும் அதை சொல்லலி
உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே
உன்னை மிஞ்சுவேன்

சூடான பேரும் அதுதான்
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால்
அது இல்லையே

ஜில்லென்ற பேரும் அதுதான்
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால்
அது இல்லையே

சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிளரவைக்கும் மிருகம்மில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும்
அது பட்டப்பேரில்லை
என் பேரின் பினால் வரும் பேர்
நான் சொல்லவா

பெரிதான பேரும் அதுதான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால்
விடையில்லையே

சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்ததே போகும்
எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே

சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பினால் வரும் பேர்
நான் சொல்லவா

உன் பேரே தெரியாத
உன்னை கூப்பிட முடியாத
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது

அட தினம்தோறும் அதை சொல்லலி
உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே
உன்னை மிஞ்சுவேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *