Kai Veesum Kaatrai Song Lyrics in Tamil from Strawberry Movie. Kai Veesum Kaatrai Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
படத்தின் பெயர்: | ஸ்ட்ராவ்பெர்ரி |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | கை வீசும் காற்றாய் |
இசையமைப்பாளர்: | தாஜ் நூர் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | உத்ரா உன்னிகிருஷ்ணன் |
பாடல் வரிகள்
கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
இது கண்கள் நனையும் பாடல்
என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா
விதியா…
கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
பூமியிலே மீண்டும் வந்து
புன்னகைக்க வாய்க்குமா
நான் தொலைத்த நாட்களெல்லாம்
மறுபடியும் மலருமா
எந்தன் உள்ளம் ஏங்குதே
தந்தை தாயை தேடுதே
வலிகள் கூடுதே
துள்ளி திரிந்த காலங்கள்
பள்ளி சென்ற நேரங்கள்
நெஞ்சம் கேட்குதே
கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
மின்மினி போல் மின்னுகிறேன்
யார் விழிகள் காணுமோ
வண்ணமில்லா ஓவியத்தை
காற்றின் விரல் தேடுமோ
சொன்ன சோகம் கொஞ்சமே
இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே
வானில் மீனாய் வாழ்கிறேன்
வாசல் பார்த்து போகிறேன்
தனிமை போதுமே
கை வீசும் காற்றாய் காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
இது கண்கள் நனையும் பாடல்
என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா
விதியா…