Kadhalikka Neramillai Serial Song Lyrics in Tamil

Kadhalikka Neramillai Serial Song Lyrics in Tamil from Vijay TV. Kadhalikka Neramillai Serial Ennai Thedi Kadhal Endra Song Lyrics in Tamil.

பாடல் வரிகள்:

என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் பெறுவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த
காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு

பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் பெறுவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு

யாரோ உன் காதலில்
வாழ்வது யாரோ
உன் கனவினில்
நிறைவது யாரோ
என் சலனங்கள்
தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள்
நீள்வது ஏனோ
ஒரு பகல் என
சுடுவது ஏனோ
என் தனிமையின்
அவஸ்தைகள் தீராதோ

காதல் தர நெஞ்சம்
காத்து இருக்கு
காதலிக்க அங்கு
நேரம் இல்லையா
இலையை போல்
என் இதயம் தவறி விழுதே

என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் பெறுவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு

காதல் ஒரு இலையுதிர்
காலமாய் மாறும்
என் நினைவுகள்
சருகுகள் ஆகும்
அந்த நேரத்தில்
மழை என வாராயோ

ஏதோ ஒரு பறவையின்
வடிவினில் கூட
ஒரு சாலையில்
இருப்பது வாழ்வா
உன் காதலை
சிறகென தாராயா

காதல் தர நெஞ்சம்
காத்து இருக்கு
காதலிக்க அங்கு
நேரம் இல்லையா
நினைக்கும் போது
என் நிழலும் ஏனோ சுடுதே

என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் பெறுவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த
காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு

பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *