Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Kadavul Ullame Song Lyrics in Tamil

Kadavul Ullame Song Lyrics in Tamil from Anbulla Rajinikanth Movie. Kadavul Ullame Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:அன்புள்ள ரஜினிகாந்த்
வருடம்:1984
பாடலின் பெயர்:கடவுள் உள்ளமே
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:லதா ரஜினிகாந்த்

Kadavul Ullame Lyrics in Tamil

பெண்: கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே
குழு: கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

பெண்: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

பெண்: சின்ன சின்ன பூக்கள்
சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில்
ஆக்கிய மாலை

பெண்: பாதம் செல்லும் பாதை காட்டிடும்
தலைவா என் தலைவா
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா

பெண்: ஜீவன் யாவும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே
குழு: ஜீவன் யாவும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

பெண்: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே

குழு: கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

பெண்: கண் இழந்த பிள்ளை
காணும் உண்மை
கண் இருக்கும் பேர்கள்
கண்டது இல்லை

பெண்: ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்

பெண்: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே
குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

பெண்: என்றும் உமக்கே
நாம் நன்றி சொல்லுவோம்

குழு: கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

குழு: அடைக்கலம் கொடுத்தவன்
அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

குழு: கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.