Asapatta Ellathaiyum Song Lyrics in Tamil from Viyabari Movie. Asapatta Ellathaiyum Song Lyrics has penned in Tamil by Parinaman.
படத்தின் பெயர்: | வியாபாரி |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | ஆச பட்ட எல்லாத்தையும் |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | பரிணாமன் |
பாடகர்கள்: | ஹரிஹரன், வைஷாலி |
Asapatta Ellathaiyum Lyrics in Tamil
ஆண்: ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
குழு: ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆண்: ஆயிரம் உறவு உன்ன
தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
குழு: ஆயிரம் உறவு உன்ன
தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
ஆண்: உன்னையும் என்னையும்
படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா
குழு: உன்னையும் என்னையும்
படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா
ஆண்: ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்
ஆண்: பட்டினியா கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம்
பாா்த்தே பசி மறப்பா
ஆண்: இள வட்டம் ஆன பின்னும்
எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வர
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா
ஆண்: நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சு சோறு தின்பா
ஆண்: பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான்
கீரி விடுவா
குழு: உன்னையும் என்னையும்
படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா
ஆண்: ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்
அம்மாவ வாங்க முடியுமா
ஆண்: மண்ணில் ஒரு செடி மொளைச்சா
மண்ணுக்கு அது ப்ரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு அது பூகம்பம்தான்
ஆண்: சூரியன சுத்திகிட்டு
தன்னை சுத்தும் பூமி அம்மா
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்மா
ஆண்: கர்ப்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பாள்
மேதையாய் உனை வளர்ப்பா
ஆண்: என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு