Hey Aatha Aathorama Variya Song Lyrics

Hey Aatha Aathorama Variya Song Lyrics in Tamil from Malaikottai Movie. Hey Aatha Aathorama Variya Song Lyrics has penned by Gangai Amaran.

படத்தின் பெயர்:மலைக்கோட்டை
வருடம்:2007
பாடலின் பெயர்:ஏய் ஆத்தா
இசையமைப்பாளர்:மணிசர்மா
பாடலாசிரியர்:கங்கை அமரன்
பாடகர்கள்:திப்பு, அனுராதா ஸ்ரீராம்

Hey Aatha Aathorama Variya Lyrics

ஆண்: ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அடி… ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா

ஆண்: அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஆண்: ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா

ஆண்: ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்
பெண்: அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்

ஆண்: தவிச்ச மனசுக்குத்
தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு
அள்ளிக்கிறேன் நீ வாம்மா

பெண்: மாருல குளிருது
சேத்தென்ன அணைச்சா
தீருமடி குளிரும்
கட்டிப்பிடிச்சிக்க

ஆண்: ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட… அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

பெண்: நான் போறேன் முன்னால
நீ வாடா பின்னாலே நாயக்கர் தோட்டத்துக்கு
ஆண்: பேசாதே கண்ணால
என்னாடி அம்மாலே வாடுற வாட்டத்துக்கு

பெண்: சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது
ஆண்: பவள வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது

ஆண்: ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஆண்: ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *