Sakkarai Nilave Song Lyrics in Tamil from Youth Movie. சக்கரை நிலவே பாடல் வரிகள். Sakkarai Nilave Song Lyrics penned in Tamil by Vairamuthu.
Sakkarai Nilave Lyrics in Tamil
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையே
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையே
மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எாித்து
குளிா் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையே
காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல
உணரத்தானே முடியும்
அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே
சொல்ல வாா்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதேன்
வெள்ளை சிாிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிாிந்து சென்றது உன் தவறா
நான் புாிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
நவம்பா் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யாா் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தா் சிலை
என் கனவில் வருவது
பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும்
எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காதென்றாய்
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
Short Notes
“சக்கரை நிலவே” என்ற பாடலானது 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “யூத்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “விஜய், ஷாஹீன் கான், விவேக், மணிவண்ணன்” ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையினை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்-ம் வசனங்களை பிரசன்ன குமாரும் எழுத, வின்சென்ட் செல்வா இயக்கியுள்ளார்.
இதனை நடராஜன் சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன்படத்தொகுப்பு பணிகளை VT விஜயன் மேற்கொண்டுள்ளார்.
மணி சர்மா இத்திரைப்படத்தின் முழுமைக்கும் பின்னணியையும் பாடல்களையும் இசையமைத்துள்ளனர்.
வாலி, வைரமுத்து, கபிலன் ஆகியோர் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.
SP பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சங்கர் மஹாதேவன், ஹரிஸ் ராகவேந்தர், திப்பு, சுஜாதா மோகன், ஹரிணி முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.
இதனை T அஜய் குமார் தயாரிக்க, Lakshmi Productions நிறுவனத்தின் கீழ் இப்படம் உருவாக்கப்பட்டது.
இது 19 ஜூலை 2002 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் யூத் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.