Chellame Idhu Irava Pagala Song Lyrics in Tamil from Kalaba Kadhalan Movie. Chellame Idhu Irava Pagala Song Lyrics sung in Tamil by Karthik.
பாடல்: | செல்லமே இது இரவா பகலா |
---|---|
படம்: | கலாபக் காதலன் |
வருடம்: | 2006 |
இசை: | நிரு |
வரிகள்: | – |
பாடகர்: | கார்த்திக், சுனிதா சாரதி |
Chellame Idhu Irava Pagala Song Lyrics
ஆண்: செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
இனிய கொடுமை நீயே நீயே
பெண்: கொட்டும் வேர்வை அட்சதையாக
கொள்ளை அழகு வெற்றில்லையாக
மென்று விடுவேன் இதழ்கள் நூறாய்
உடலும் உயிரும் வேதமாய்
ஆண்: இரவு கருகிட அரும்ப வேண்டும்
இதயம் உருகிட விரும்ப வேண்டும்
நாணம் முழுவதும் தீர தீண்ட வா
ஆண்: அழகுக்கு நீ ஓர்
அகராதி போல
அதன் அர்த்தம் யாவும்
நான் அறிந்து கொள்ள வேண்டும்
பெண்: இவளுக்கு நீ ஓர்
மருதாணி போல
உடல் எங்கும் பூச
நான் உயிர் சிவக்க வேண்டும்
ஆண்: உடைகளை உடைத்தால்
புது வெள்ளம் இங்கு பாயுமே
பெண்: கரைகளை எல்லாம்
தடை இன்றி இன்பம் சேருமே
ஆண்: செய்முறை நேரம்
விளக்கம் ஏன் வேண்டாமே
இருவரும்: செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
ஆண்: இனிய கொடுமை நீயே நீயே
ஆண்: ஒரு நூறு பெண்கள்
உருவாக்கும் போதை
உன்னிடம் தானே
நான் பருக பருக வேண்டும்
பெண்: உன்னைச் சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்
போனாலும் நானே
உன் நினைவில் வாழ வேண்டும்
ஆண்: தருவதை தந்தால்
தவறு இல்லை இங்கு ஏதுமே
பெண்: இடைவெளி எல்லாம்
இனி இல்லை எந்த நாளுமே
ஆண்: நடை தொட்ட போதுமே
முடிவே ஏன் வேண்டாமே
பெண்: செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
இனிய கொடுமை நீயே நீயே