Bannari Mariyamma Song Lyrics in Tamil

Bannari Mariyamma Song Lyrics in Tamil from Solaiyamma Movie. Bannari Mariyamma Song Lyrics has penned in Tamil by Kasthuri Raja.

பாடல்:பண்ணாரி மாரியம்மா
படம்:சோலையம்மா
வருடம்:1992
இசை:தேவா
வரிகள்:கஸ்தூரி ராஜா
பாடகர்:S ஜானகி

Bannari Mariyamma Lyrics in Tamil

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே
ஆறுமே நீ பாத்தா

குழு: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே
ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல

குழு: பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: சீதை தீக்குளிச்சு
ராமனைத்தான் நம்ப வைச்சா
ராமாயணம் சொன்ன சேதிதான்
கோவம் கொண்டெழுந்து
கண்ணகிதான் ஊரெரிச்சா
நானும் கூட அந்த சாதிதான்

பெண்: சீதை தீக்குளிச்சு
ராமனைத்தான் நம்ப வைச்சா
ராமாயணம் சொன்ன சேதிதான்
கோவம் கொண்டெழுந்து
கண்ணகிதான் ஊரெரிச்சா
நானும் கூட அந்த சாதிதான்

பெண்: மேகம் கருக்கணும்
மே காத்து அடிக்கணும்
மும்மாரி சேர்ந்து பெய்யணும்
ஊரு மத்தியில
என் பேரு சுத்தமுன்னு
சாதி சனம் நின்னு பேசணும்

பெண்: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

குழு: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல

குழு: பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: பாதை மாறலடி
பாயெடுத்து போடலடி
பத்தினிய பதற வைச்சே
சாமி சந்நதிக்கு
சத்தியமா சேர வந்த
பூவு ஒண்ண கருக வைச்சே

பெண்: பாதை மாறலடி
பாயெடுத்து போடலடி
பத்தினிய பதற வைச்சே
சாமி சந்நதிக்கு
சத்தியமா சேர வந்த
பூவு ஒண்ண கருக வைச்சே

பெண்: ஊரு சிரிச்சதும்
ஓயாம ஏசினதும்
உன் காதில் கேட்கவில்லையா
நாதியற்று இப்ப
நானாக தவிக்கிறன்
நீ கண்ணில் பார்க்கவில்லையா

பெண்: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

குழு: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல

குழு: பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *