Amman Pugalai Pada Song Lyrics in Tamil

Amman Pugalai Pada Song Lyrics in Tamil from Kannathal Movie. Amman Pugalai Pada Song Lyrics has penned in Tamil by Ilayaraja.

பாடல்:அம்மன் புகழை பாட
படம்:கண்ணாத்தாள்
வருடம்:1998
இசை:இளையராஜா
வரிகள்:இளையராஜா
பாடகர்:பவதாரணி

Amman Pugalai Pada Lyrics in Tamil

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா

நாடி நரம்பு ஓடும் உதிரம்
அனுதினம் படிப்பது
அவள் பெயர் தான்

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்

காற்றில் கலக்கும் நல்ல‌ பாடலில்
கவிதை வடிக்கும் அந்த தேடலில்
ஒளிந்து மறைந்து ஓடும் ஜீவன்
அது என்றும் நீயல்லவா

உனது சிரிப்பு அந்த மலர்களில்
இயற்கை விரிப்பு அதன் நிறங்களில்
வசந்த வாசம் வர்ணஜாலம்
அனைத்திலும் நீயல்லவா

என் வாக்கின் பொருளாய்
நீ போடும் கோலங்கள்
மண் மீது யாரும்
அறியாத மாயங்கள்
கிடைத்த பிறவி இதில்
எனக்கு பெருமை என்னவோ

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்

எந்தன் மனது மெழுகானது
உன் புகழில் ஆடும் விழுதானது
இரவும் பகலும் உனது நினைவில்
வழி செல்ல துணையல்லவா

மரத்தில் கூடும் அந்த பறவைபோல்
கலைந்து ஓடும் அந்த மேகம் போல்
நிலையில்லாத உலக வாழ்க்கை
மனிதர்கள் நிலையல்லவா

உலகாளும் உமையே
உன் பாதம் தேடினேன்
சுடராடும் ஒளியே
உனை போற்றி பாடினேன்
உந்தன் கோவில் மணியில் வரும்
நாதத்தோடு கலப்பேன்

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா

நாடி நரம்பு ஓடும் உதிரம்
அனுதினம் படிப்பது
அவள் பெயர் தான்

அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *