Thullathe Thullathe Song Lyrics in Tamil from Nageswari Movie. Thullathe Thullathe Song Lyrics has penned in Tamil by Kalidasan.
பாடல்: | துள்ளாதே துள்ளாதே |
---|---|
படம்: | நாகேஸ்வரி |
வருடம்: | 2001 |
இசை: | SA ராஜ்குமார் |
வரிகள்: | காளிதாசன் |
பாடகர்: | KS சித்ரா |
Thullathe Thullathe Lyrics in Tamil
துள்ளாதே துள்ளாதே
தூது வந்த கழுகே
கொல்லிமலை நாகம் நான்
என்னை சுற்றாதே
கள்ளப்பராந்தே
கையை கொத்தாதே
நெஞ்சுக்குள் தூங்கும்
நஞ்சை தீண்டாதே
கருடா ஓ கருடா அட முரடா
ஓம்சக்தி என் தாயடா
விடுடா நீ விடுடா எனை விடுடா
என் கோபம் தான் தீயடா
துள்ளாதே துள்ளாதே
தூது வந்த கழுகே
கொல்லிமலை நாகம் நான்
என்னை சுற்றாதே
சிவன் கழுத்தில்
பொன்மாலை நானே
மாயவனை
மடிமேல் சுமந்தேனே
கணபதிக்கு அரைஞான்
கொடி ஆனேன்
வேல்முருகன் அவன்
திருவடி வாழ்வேன்
எனது குடையின்றி
உலகையாழ்கிறாள்
திருவேற்காட்டு கருமாரி
பாவம் செய்தவன்
பழியை தீர்க்கவே
நான் இங்கு வந்தேன் உருமாரி
நான் பெண்ணை காக்கவே
அன்னை மாரியாய்
மண்ணில் தோன்றினேனே
நான் அன்புக்கு ஈஸ்வரி
வீண் வம்புக்கு தீப்பொறி
துள்ளாதே துள்ளாதே
தூது வந்த கழுகே
கொல்லிமலை நாகம் நான்
என்னை சுற்றாதே
உலகினிலே
என்பேர் நாகேஷ்வரி
வணங்கி நின்றால்
நானே யோகேஸ்வரி
படம் எடுத்தால்
என் தேகம் விரியும்
படைபலங்கள்
எனை பார்த்தால் நடுங்கும்
உலகை உலர்த்ததோ
நாக ரத்தின ஒளியை
கொடுத்தவள் நான்தானே
உருட்டு மாயங்கள்
உருட்டு புரட்டெல்லாம்
எனது எதிரிலே வீண்தானே
நான் பூமி மீதியை
தலையில் சுமக்கிற
பொறுமைசாளி இனமே
நான் நியாயத்தை காப்பவள்
பொய் மாயத்தை மாய்ப்பவள்
துள்ளாதே துள்ளாதே
தூது வந்த கழுகே
கொல்லிமலை நாகம் நான்
என்னை சுற்றாதே
கள்ளப்பராந்தே
கையை கொத்தாதே
நெஞ்சுக்குள் தூங்கும்
நஞ்சை தீண்டாதே
கருடா ஓ கருடா அட முரடா
ஓம்சக்தி என் தாயடா
விடுடா நீ விடுடா எனை விடுடா
என் கோபம் தான் தீயடா