Nenjodu Kalanthavale Song Lyrics Tamil from Sembaruthi Serial in Zee Tamil TV. Famous Tamil Serial Sembaruthi, Nenjodu Kalanthavale Song Lyrics in Tamil Font. நெஞ்சோடு கலந்தவேளே பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
பாடல் வரிகள்:
பெண்: உன் பெயரில்
என் பெயர் சேரும் நாள் இதுதான்
துக்கம் இன்றி நாள்தோறும்
கரைகின்றேன் என் உயிரே
ஆண்: ஏ பெண்ணே உன்னை பார்த்த
நாள் முதலாய் தூங்கவில்லை
நான் இதுபோல இருந்ததில்லை
என் உயிரே
பெண்: உன் பெயரில்
என் பெயர் சேரும் நாள் இதுதான்
துக்கம் இன்றி நாள்தோறும்
கரைகின்றேன் என் உயிரே
பெண்: உன்னை பார்த்தாலே அதுபோதும்
நீ சிரிச்சாலே அதுபோதும்
பசிக்காதே ஒருபோதும்
என் உயிரே…
பெண்: உன் பேர சொன்னாலே அதுபோதும்
அதை கேட்டாலே அதுபோதும்
நொடிகூட வாழ்ந்தாலும்
இந்த ஜென்மம் போதுமே
ஆண்: உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓர் சுகமே
உயிருக்குள் உனை தினமும்
சுமந்திருப்பேன் ஒரு தாய் போலவே
ஆண்: உன் இமையோடு நான் இருப்பேன்
கண் இமைக்காமல் நான் .ரசிப்பேன்
உன்னோடு கலந்திருப்பேன்
உன் உயிரே
ஆண்: காற்றாக நான் இருப்பேன்
மூச்சோடு கலந்திருப்பேன்
உன் கண்ணீரை நான் துடைப்பேன்
என் அன்பே
ஆண்: நெஞ்சோடு கலந்தவேளே
என் உயிரோடு உறைந்தவளே
எனக்காக பொறந்தவளே
என் அன்பே
ஆண்: உனக்காக நான் இருப்பேன்
உன் நிழலாக நான் வசிப்பேன்
எப்போதும் துணை இருப்பேன்
என் உயிரே
குழு: மங்களம் பொங்கிட
நெஞ்சங்கள் சேர்ந்திட
நினைக்க நினைக்க
மனம் ஜொலிக்க ஜொலிக்க
குழு: இங்கு மங்கள வாத்தியம்
ஒலிக்க ஒலிக்க
எங்கள் சொந்தங்கள் சேர்ந்ததே