Yeya En Kottikkaaraa Song Lyrics

Yeya En Kottikkaaraa Song Lyrics in Tamil Papanasam Movie. Yeya En Kottikkaaraa Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:பாபநாசம்
வருடம்:2015
பாடலின் பெயர்:ஏயா என் கோட்டிக்காரா
இசையமைப்பாளர்:ஜிப்ரான்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:சுந்தர் நாராயண ராவ்,
மாளவிகா அனில்குமார்

பாடல் வரிகள்:

பெண்: ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

ஆண்: ஏ ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏல என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி

பெண்: தேடி சேர்த்த காசை போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

ஆண்: காசை போல காதலும்
செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி

ஆண்: சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ
என்னை தாங்க இப்போ
மூனு அம்மை அல்லோ

பெண்: பாலருவியும தேனருவியும்
ஐந்தருவியும் உன் நேசத்தின்
முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்க்கமிது

பெண்: ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

ஆண்: காசை போல காதலும்
செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி

பெண்: பட்டாம்பூச்சி போல
வண்ணம் அள்ளி தார
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார

ஆண்: நான் நினைச்சதும்
நீ நினைச்சதும்
நூழிலையில தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ

பெண்: தேடி சேர்த்த காசை போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

ஆண்: காசை போல காதலும்
செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி

சிறுகுறிப்பு:

பாபநாசம் திரைப்படமானது 2013-ல் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் உருவாக்கம் ஆகும். இதில் கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, MS பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை ஜீத்து ஜோஷ் இயக்கியுள்ளார். இதில் உள்ள பாடல்களின் வரிகள் அனைத்தும் நா.முத்துக்குமார் எழுதியது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு வெளியானது. மேலும் அறிய