Vaa Vaa Penne Song Lyrics in Tamil from Uriyadi 2 Movie. Vaa Vaa Penne Song Lyrics was written in Tamil by Vijay Kumar and Nagaraji.
படத்தின் பெயர் | உறியடி 2 |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | வா வா பெண்ணே |
இசையமைப்பாளர் | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர் | விஜய் குமார், நாகராஜி |
பாடகர்கள் | சித் ஸ்ரீராம், பிரியங்கா |
பாடல் வரிகள்:
ஆண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
ஆண்: என் இசை நீயே உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்
என் இசை நீயே உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே
ஆண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
பெண்: நாணம் மாறும் மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்
ஆண்: நேற்றிரவு நான் விழித்திருந்தேன்
காரணம் நீ கண்ணே காரணம் நீ
அதிகாலையில் நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ அன்பே காரணம் நீ
ஆண்: நிழலாய் நானே உடன் வருவேனே
தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும்
புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும்
பெண்: காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்
இருவரும்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
பெண்: வா வா அன்பே வழித்துணை நானே
நீயும் நானும் ஓர் உயிர் தானே
வா வா அன்பே உன் துணை நானே
நீ என் வாழ்வின் புது வரம்தானே