Ennoda Nadantha Song Lyrics in Tamil

Ennoda Nadantha Song Lyrics in Tamil from Viduthalai Movie. Ennoda Nadantha or Unnodu Nadantha Song Lyrics has penned in Tamil by Suka.

பாடல்:ஒன்னோட நடந்தா
படம்:விடுதலை
வருடம்:2023
இசை:இளையராஜா
வரிகள்:சுகா
பாடகர்:தனுஷ், அனன்யாபட்

Ennoda Nadantha Lyrics in Tamil

ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

பெண்: நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

பெண்: ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ஆண்: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

பெண்: சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே

ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

பெண்: காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது

ஆண்: முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

ஆண்: நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

பெண்: கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ஆண்: பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

பெண்: ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ

பெண்: ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே

ஆண்: நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது

ஆண்: நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்

பெண்: கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ஆண்: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

பெண்: சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே

ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

Unnoda Nadantha Song Lyrics

Male: Onnoda Nadantha Kallana Kaadu
Onnoda Nadantha Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume

Female: Nee Pogum Paadhai Poonkalgalaale
Ponnaana Vazhiyaai Maaridume

Male: Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume
Nee Pogum Paadhai Poonkalgalaale
Ponnaana Vazhiyaai Maaridume

Female: Raasave Unnale Aagasam Vidiyum
Lesaga En Nenjam Pookindrathe

Male: Raasathi Aagasam Unnala Vidiyum
Lesaga En Nenjam Pookindrathe

Female: Solladha Maayangal Unnal Nadakudhe

Male: Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume

Female: Kaathil Varum Puluthiyai Pol
Namma Thoothugira Ooru Idhu
Thukkathila Thuvandu Irundha
Adhu Thookivida Nenaikaadhu

Male: Munneri Poga Muttukattai Yedhu
Pin Thirumbi Paakkadhe
Onthunaiku Naanthan
Enthunaikku Neethaan
Endrum Idhu Maaradhe

Male: Nalvaaku Oor Sollum
Kaalam Varum
Allal Irulai Virattum
Vidiyal Varum

Female: Kallana Kaadu Onnoda Nadandhaa
Poothadum Poovanam Aagidume

Male: Pooththadum Poovanam Aagidume

Female: Aarariraro Aarariraro
Aarariraro Aarariraro
Aararirarari Rariraro
Aararirarari Rariraro

Female: Yethi Vecha Deepam Onnu
Endha Samigalum Paakaliye
Sethu Vecha Kanavugala
Niravethi Vida Yarumillaiye

Male: Nikkadha Kaalam Neraaga Oodum
Eppodhum Maaradhu
Illarkkum Yettram Endrenum Kodukkum
Illamal Pogadhu

Male: Nambikkai Kondaarkku
Naalai Undu
Nam Vaazhvil Endrendrum
Santhosam Pongi Varum

Female: Kallana Kaadu Onnoda Nadandhaa
Pooththadum Poovanam Aagidume
Raasave Unnale Aagasam Vidiyum
Lesaga En Nenjam Pookindrathe

Male: Raasathi Aagasam Unnala Vidiyum
Lesaga En Nenjam Pookindrathe

Female: Solladha Maayangal Unnal Nadakuthe

Male: Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume
Poothadum Poovanam Aagidume

Short Info

விடுதலை என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி குற்றவியல் திரைப்படமாகும். இது வெற்றிமாறனால் எழுதி இயக்கப்பட்டது. இதனை RS Infotainment பதாகைகளின் கீழ் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு இளையராஜா பின்னணி இசையமைத்துள்ளர். மேலும் அறிய wikipedia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *