Thoda Thoda Enave Song Lyrics in Tamil

Thoda Thoda Enave Song Lyrics in Tamil from Thulladha Manamum Thullum Movie. Thoda Thoda Enave Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:துள்ளாத மனமும் துள்ளும்
வருடம்:1999
பாடலின் பெயர்:இருபது கோடி
இசையமைப்பாளர்:SA ராஜ்குமார்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஹரிஹரன், KS சித்ரா

பாடல் வரிகள்:

பெண்: தொடு தொடுவெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆண்: விடு விடுவெனவே
வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

பெண்: மன்னவா ஒரு கோவில் போல்
இந்த மாளிகை எதற்காக
ஆண்: தேவியே என் ஜீவனே
இந்த ஆலையம் உனக்காக

பெண்: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்
ஆண்: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
பெண்: சாத்தியமாகுமா
ஆண்: நான் சத்தியம் செய்யவா

பெண்: தொடு தொடுவெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

பெண்: இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்
ஆண்: நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்

பெண்: நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்
ஆண்: உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்

பெண்: ஏ ராஜா இது மெய்தானா
ஆண்: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
பெண்: நான் நம்புகிறேன் உன்னை

பெண்: தொடு தொடுவெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

பெண்: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க
ஆண்: அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க

பெண்: இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
ஆண்: காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு

பெண்: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஆண்: ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
பெண்: உன் அன்பு அது போதும்

பெண்: தொடு தொடுவெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆண்: விடு விடுவெனவே
வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

பெண்: மன்னவா ஒரு கோவில் போல்
இந்த மாளிகை எதற்காக
ஆண்: தேவியே என் ஜீவனே
இந்த ஆலையம் உனக்காக

பெண்: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்
ஆண்: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
பெண்: சாத்தியமாகுமா
ஆண்: நான் சத்தியம் செய்யவா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *