Iruvathu Kodi Song Lyrics in Tamil from Thulladha Manamum Thullum Movie. Iruvathu Koodi or Irupathu Kodi Song Lyrics penned by Vairamuthu.
படத்தின் பெயர்: | துள்ளாத மனமும் துள்ளும் |
---|---|
வருடம்: | 1999 |
பாடலின் பெயர்: | இருபது கோடி |
இசையமைப்பாளர்: | SA ராஜ்குமார் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஹரன் |
பாடல் வரிகள்:
இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள்
கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு
புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ
தங்கமான கூந்தல்
தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு
வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு
சேர்ந்து நிற்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி
என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய்
இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ
ஜூலை மாதம் பூக்கும்
கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின்
அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம்
மாறக்கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம்
இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள்
சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில்
வசிப்பது பெருமை
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள்
கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு
புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ