Thangachi Song Lyrics in Tamil from Meyaadha Maan Movie. Annabelle Pei Vara or Thangachi Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர்: | மேயாத மான் |
---|---|
வருடம்: | 2017 |
பாடலின் பெயர்: | அனபெல் பேயா வாரா |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | அந்தோணி தாசன் |
Annabelle Pei Vara Lyrics in Tamil
அனபெல் பேயா வாரா
அன்பில் குட்டி தாயா வாரா
அனபெல் பேயா வாரா
அன்பில் குட்டி தாயா வாரா
அண்ணண் காச ஆட்டைய போட்டு
பியூட்டி பார்லர் போயி வாரா
மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு
அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா
அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா
சேனல நீ மாத்தி பாரு
கழுத்து மேல கத்தி வைப்பா
ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு
ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு
வேல சொன்னா கேட்க மாட்டா
மனுஷனாவே மதிக்க மாட்டா
வேல சொன்னா கேட்க மாட்டா
மனுஷனாவே மதிக்க மாட்டா
செய்யலைன்னா செத்தடினா
போடா கூந்தலுனு போயிடுவா
கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
ரகசியம் சொல்லி வெச்சா
பக்குவமா மூடிடுவா
எப் எம்-ல ஏத்தி விட்டு
எஸ்கேப் ஆயி ஓடிடுவா
கோல பொடி மூஞ்சில கொட்டி
சுத்தி சுத்தி ஆடிடுவா
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்
குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா
குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ
அரைமணி நேரம் சிரிச்சிருப்பா
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு
காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா
காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா
என்னை என்னி கண்ணீர் விட்டு
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா
வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்
வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்
வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல
வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல
கணவனே வந்தாலும் அவ
என்ன விட்டு கொடுத்ததில்ல
நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி
நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி
அவ இல்லாம…
அவ இல்லாம நான் இல்ல
நா இல்லாம அவளும் இல்ல
அவ இல்லாம நான் இல்ல
நா இல்லாம அவளும் இல்ல
ஆனா இத என்னைக்குமே
நாங்க வெளிய சொன்னதில்ல
தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தங்கச்சி… தங்கச்சி…
தங்கச்சி…
Short Info
மேயாத மான் என்பது ரத்ன குமார் இயக்குனராக அறிமுகமாகி இயக்கி 2017-ம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்திலும் விவேக் பிரசன்னா, இந்தூஜா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா சீனிவாசன் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் வழங்கினார் மற்றும் கார்தேகீன் சந்தனம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மூலம் படத்தை தயாரித்தார். படத்தின் அசல் ஒலிப்பதிவு மற்றும் ஸ்கோர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் இணைந்து இயற்றினர். இப்படம் தீபாவளியுடன் இணைந்து 18 அக்டோபர் 2017 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிக.