Rathathin Rathame Song Lyrics in Tamil

Rathathin Rathame Song Lyrics in Tamil from Velayudham Movie. Rathathin Rathame Song Lyrics has penned in Tamil by Annamalai.

படத்தின் பெயர்:வேலாயுதம்
வருடம்:2011
பாடலின் பெயர்:ரத்தத்தின் ரத்தமே
இசையமைப்பாளர்:விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்:அண்ணாமலை
பாடகர்கள்:ஹரிச்சரண், ஸ்ரீமதுமிதா

Rathathin Rathame Lyrics in Tamil

ஆண்: ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

ஆண்: அம்மாவும் அப்பாவும்
எல்லாமே நீதானே
என் வாழ்க்கை உனக்கல்லவா
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா

ஆண்: ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே

ஆண்: அன்பென்ற ஒற்றை சொல்லை
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கள் ஈடு இல்லை

ஆண்: என் நெஞ்சம் உன்னை மட்டும்
கடிகார முள்ளை சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்

ஆண்: நீ சொன்னால் எதையோ செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா

ஆண்: தாஜ்மஹால் உனக்கு
தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேலைதான் நெஞ்சு தாரேன்

பெண்: என்னோடு நீ இருந்தால்
வோ் ஏதும் ஈடாகுமா
கண்டாங்கி சேல போதும்
வோ் ஏதும் நான் கேப்பேனா

ஆண்: வானத்தில் நீலம் போலே
பூமிக்குள் ஈரம் போலே

பெண்: இருட்டாலும் எரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா

சிறுகுறிப்பு:

வேலாயுதம் என்பது எம்.ராஜா எழுதி இயக்கி 2011-ம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி சூப்பர் ஹீரோ படம் ஆகும். இதில் விஜய், ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், ஜெனிலியா டிசோசா, சந்தனம், சூரி, அபிமன்யு சிங், வினீத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை பிரியனின் ஒளிப்பதிவுடன் விஜய் ஆண்டனி இசையமைத்தார். இப்படம் 26 அக்டோபர் 2011 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *