Kannil Anbai Solvale Song Lyrics in Tamil from Easan Movie. Kannil Anbai Solvale Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | ஈசன் |
---|---|
வருடம்: | 2010 |
பாடலின் பெயர்: | கண்ணில் அன்பை சொல்வாளே |
இசையமைப்பாளர்: | ஜேம்ஸ் வசந்தன் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | பத்மநாபன் |
Kannil Anbai Solvale Lyrics in Tamil
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே
மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும்
இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும்
குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து
உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல்
என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளைப் போலே
வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட
நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று
கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால்
தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே
இவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக
இவளைக் கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்குத்தான்
அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே
இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே
மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
சிறுகுறிப்பு:
ஈசன் என்பது 2010-ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது சசிகுமார் எழுதி இயக்கியதாகும். பிளாக்பஸ்டரான சுப்பிரமணியபுரத்திற்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை இயக்குகினார். இதில் சாமுத்திரகனி, வைபவ், ஏ.எல்.அழகப்பன் மற்றும் அபினயா ஆகியோர் பல முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது 17 டிசம்பர் 2010 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிக.