Pothavillaye Pothavillaye Song Lyrics in Tamil from Mudinja Ivana Pudi Movie. Pothavillaye Song Lyrics has penned in Tamil by Madhan Karky.
படத்தின் பெயர்: | முடிஞ்சா இவன புடி |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | போதவில்லையே |
இசையமைப்பாளர்: | டி. இமான் |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்கள்: | சக்தி அமரன், ஸ்ரேயா கோஷல் |
Pothavillaye Song Lyrics in Tamil
பெண்: போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
பெண்: நாள் முழுக்க உன்னை
கண்கள் தின்ற பின்னும்
உந்தன் சொற்கள் மீது
நான் நனைந்த பின்னும்
பெண்: இன்னும் இன்னும் பக்கம் வந்தும்
கிட்ட தட்ட ஒட்டி கொண்டும்
மூச்சில் தீயும் பற்றி கொண்டும்
பெண்: போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
ஆண்: தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே
கை கோர்த்து போகும் இந்த சாலை போதாதே
என் எண்ண விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி
ஆண்: உன் அழகை பருக
என் கண்கள் போதாதடி
என் நிலையை எழுத
வானங்கள் போதாதடி
ஆண்: நேர முள்ளை பின் இழுத்தும்
வாரம் எட்டு நாள் கொடுத்தும்
சுற்றும் பூமியை தடுத்துமே
ஆண்: போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
பெண்: கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே
கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
பெண்: நம் கனவை செதுக்க
பிறந்தும் போதாதுடா
இவ்வுலகில் இருக்கும்
தெய்வங்கள் போதாதுடா
பெண்: குட்டி குட்டி கோவம் கொண்டு
கட்டி முட்டி மோதி கொண்டு
திட்டி திட்டி தீர்த்த பின்னும்
பெண்: போதவில்லையே போதவில்லையே
ஆண்: உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
பெண்: சுவாச பையில் உந்தன்
வாசம் பூட்டி வைத்தும்
நெஞ்ச ஏட்டில் இன்னும்
உன் பேரை தீட்டி வைத்தும்
ஆண்: பாடல் தீர்ந்து போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்
பெண்: போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே