Poovum Kaatrum Serum Pothu Song Lyrics in Tamil from Kunguma Pottu Gounder. Poovum Kaatrum Serum Pothu Song Lyrics has penned by Ravishankar.
படத்தின் பெயர்: | குங்கும பொட்டு கவுண்டர் |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | பூவும் காத்தும் சேரும் போது |
இசையமைப்பாளர்: | சிற்பி |
பாடலாசிரியர்: | ரா.ரவிசங்கர் |
பாடகர்கள்: | உன்னி கிருஷ்ணன் |
பாடல் வரிகள்
பூவும் காத்தும் சேரும் போது
வாசம் வருகிறது
நேரம் காலம் சேரும் போது
வாழ்க்கை வருகிறது
நல்ல நல்ல நேரம்
நம்மை வந்து சேரும்
முத்து முத்து தீபம்
நித்தம் ஒளி வீசும்
அந்த வானம் வாழ்த்தும்
பூவும் காத்தும் சேரும் போது
வாசம் வருகிறது
நேரம் காலம் சேரும் போது
வாழ்க்கை வருகிறது
கோடி கோடி கனவுகள் கண்டேன்
கூடி வந்ததென்ன
காலம் நேரம் வாழ்த்தும் போது
இனிமேல் கவலையென்ன
கோடி கோடி கனவுகள் கண்டேன்
கூடி வந்ததென்ன
காலம் நேரம் வாழ்த்தும் போது
இனிமேல் கவலையென்ன
நினைத்தது நடக்கிறது
என் நெஞ்சம் இனிக்கிறது
ஆனந்த மழையினிலே
என் கண்கள் நனைகிறது
பூவும் காத்தும் சேரும் போது
வாசம் வருகிறது
நேரம் காலம் சேரும் போது
வாழக்கை வருகிறது
ஏணியாக ஏற்றி வைப்பேன்
உலகில் நீ உயர
மாலை போட காத்து நிற்பேன்
மகனே நீ ஜெயிக்க
ஏணியாக ஏற்றி வைப்பேன்
உலகில் நீ உயர
மாலை போட காத்து நிற்பேன்
மகனே நீ ஜெயிக்க
கோபுரம் நீயாக
உனை தாங்கிடும் நிலமாவேன்
வெளிச்சத்தில் நீ வாழ என்
விழிகளில் விளக்கு வைப்பேன்
பூவும் காத்தும் சேரும் போது
வாசம் வருகிறது
நேரம் காலம் சேரும் போது
வாழ்க்கை வருகிறது
நல்ல நல்ல நேரம்
நம்மை வந்து சேரும்
முத்து முத்து தீபம்
நித்தம் ஒளி வீசும்
அந்த வானம் வாழ்த்தும்