Aasa Dosa Appala Vada Song Lyrics in Tamil from Paramasivan Movie. Aasa Dosa Appala Vada Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | பரமசிவன் |
---|---|
வருடம்: | 2006 |
பாடலின் பெயர்: | ஆசை தோசை |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | பிரியா சுப்பிரமணி |
பாடல் வரிகள்
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை பட்டதை செய் செய் செய்
நூத்திஒன்னு மொய் போதாது டோய்
சொத்த எழுதி வை வை வை
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
நான் பொறந்தேன் பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
அழக பார்த்தா ஜவுளி கட
அளந்து பார்த்தா ரேஷன் கட
அடகு வச்சா வட்டி கட
அல்வா தந்தா இருட்டு கட
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை பட்டதை செய் செய் செய்
நூத்திஒன்னு மொய் போதாது டோய்
சொத்த எழுதி வை வை வை
நான் குளிச்சு கரையேறிப் போனா
மீன்கள் எல்லாம் மோட்சம் பெறும்
நான் கடிச்ச தக்காளிப் பழமும்
நாலு கோடி ஏலம் போகும்
நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பாச்சின கட்ட
அணைச்சுக்கவா
நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பாச்சின கட்ட
அணைச்சுக்கவா
அணைச்சுக்கவா
ஒரு தீப்பந்தம் நட்டு வச்சு
வா பூப்பந்து விளையாடலாம்
நான் பொறந்தேன் பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
அழக பார்த்தா ஜவுளி கட
அளந்து பார்த்தா ரேஷன் கட
அடகு வச்சா வட்டி கட
அல்வா தந்தா இருட்டு கட
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை பட்டத செய் செய் செய்
என்னத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே
கண்ணத்தான் பாத்தாலே போதும்
கடவுளுக்கும் ஆசை வருமே
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குயின்னு
வந்திருக்கேன்
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குயின்னு
வந்திருக்கேன்
நானும் போகாத ஊரே இல்ல
அங்கே மயங்காத பேரு இல்ல
நான் பொறந்தேன் பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
அழக பார்த்தா ஜவுளி கட
அளந்து பார்த்தா ரேஷன் கட
அடகு வச்சா வட்டி கட
அல்வா தந்தா இருட்டு கட