Poove Mudhal Poove Song Lyrics in Tamil from Kadhal Kirukkan Movie. Poove Mudhal Poove Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர்: | காதல் கிறுக்கன் |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | பூவே முதல் பூவே |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | ஹரிஷ் ராகவேந்திரா |
பாடல் வரிகள்
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வளியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கை சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
மணல்வெளியில் ஒருவீட்டை
கட்டிவைத்தேன் உனக்காக
மரம்பாட்சி பொம்மையினை
மணமுடித்தேன் உனக்காக
ஜோசிய கிளி நீயடி
என் ஜாதகம் உனக்காக
பிள்ளையார் சுழி நீயடி
என் கடிதங்கள் உனக்காக
கூந்தலில் நான் வாழ்ந்திட
தினம் பூப்பேன் உனக்காக
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
கடல் நீரை தூரெடுத்து
குளிக்கவைப்பேன் உனக்காக
வானவில்லை தோலுரித்து
சேலை நெய்வேன் உனக்காக
பூச்சியம் போல் பிறைநிலை
அதில் வளையல்கள் உனக்காக
மின்னலின் சிறு கீற்றினில்
இரு மெட்டிகள் உனக்காக
என்னுடல் வெறும் கூடுதான்
உயிர் உள்ளது உனக்காக
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வளியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கை சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக