Penkiliye Penkiliye Song Lyrics in Tamil

Penkiliye Penkiliye Song Lyrics in Tamil from Sandhitha Velai Movie. Penkiliye Penkiliye Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:சந்தித்த வேலை
வருடம்:2000
பாடலின் பெயர்:பெண் கிளியே பெண் கிளியே
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:பி.உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன்

பாடல் வரிகள்:

ஆண்: பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

பெண்: வாய் மொழி எல்லாமே
வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல்
உண்மைத் தோன்றாது

ஆண்: வாய்மொழி எல்லாமே
வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால்
ஆண் கிளி தூங்காது

பெண்: ஆண் கிளியே ஆண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு
வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

ஆண்: பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
பெண்: யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா

ஆண்: விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
பெண்: கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா

ஆண்: உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை
பெண்: மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

ஆண்: பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

ஆண்: என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
உன் காதிலே கேட்கவே இல்லையா
பெண்: நீ ஆழிப் போல் அலைகளை ஏவினாய்
நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்

ஆண்: நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா
பெண்: உண்மைக் காண வன்மை இல்லை
உங்கள் விழி என்மேல் பழி போடுமா

ஆண்: நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை
பெண்: கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை

பெண்: ஆண் கிளியே ஆண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

ஆண்: பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *