Oru Varthai Solla Oru Varusham Song Lyrics

Oru Varthai Solla Oru Varusham Song Lyrics in Tamil from Ayya Movie. Oru Varthai Solla Oru Varusham Song Lyrics has penned by Pa.Vijay.

படத்தின் பெயர்:ஐயா
வருடம்:2005
பாடலின் பெயர்: ஒரு வார்த்தை கேட்க
இசையமைப்பாளர்:பரத்வாஜ்
பாடலாசிரியர்:
பாடகர்கள்:கே.கே, ஷாதனா சர்கம்

Oru Varthai Solla Oru Varusham Lyrics

பெண்: ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்

பெண்: ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்

பெண்: மணமாலை ஒன்ன
பூ பூவாய் கோா்த்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியா வேர்த்திருந்தேன்

பெண்: சூரியன சூரியன
சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர
ஆசைப்பட்டேன்

பெண்: சிங்கத்தையும் சிங்கத்தையும்
சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள்
பூட்டி கிட்டேன்

பெண்: தண்ணிக்குள்ள தான்
நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே
குடிச்சிருச்சே

ஆண்: ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்

பெண்: ஊருக்குள்ள ஓடும் தெருவில்
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்

ஆண்: இதயத்தை தட்டி தட்டி
பார்த்துப்புட்ட
அது திறக்கல என்றதுமே
உடைச்சுப்புட்ட

பெண்: நீ கிடைக்க வேண்டும் என்று
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்
பேச்சியம்மன் கோயில் சாமி
பேப்பர் சாமி ஆனது என்ன

ஆண்: கண்ணுக்குள்ள ஓடிய உன்ன துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச

பெண்: ஓ நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமி ஆனதய்யா

ஆண்: ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்

பெண்: ஆஆ… ஆஆ…

பெண்: அடுத்த வீட்டு கல்யாணத்தின்
பத்திரிக்கை பார்க்கும்போது
நமது பேரை மணமக்களாக
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

ஆண்: நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு

பெண்: கட்டபொம்மன் உருவம் போல
உன்ன வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசபற்று ஓவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட

ஆண்: அணை கட்டு போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு ஒடஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சது என்ன

பெண்: வேப்ப மரம் சுத்தி வந்தேன்
அரச மரமும் பூத்ததய்யா

பெண்: ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
ஆண்: ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்

பெண்: இந்த பார்வை பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
ஆண்: அந்த பார்வை பார்க்க
முடியாம நான் ஒதுங்கி நின்னேன்

பெண்: சூரியன சூரியன
சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர
ஆசைப்பட்டேன்

பெண்: சிங்கத்தையும் சிங்கத்தையும்
சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள்
பூட்டி கிட்டேன்

பெண்: தண்ணிக்குள்ள தான்
நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே
குடிச்சிருச்சே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *