Ooru Sanam Thoongiruchu Song Lyrics in Tamil

Ooru Sanam Thoongiruchu Song Lyrics in Tamil from Mella Thirandhathu Kadhavu Movie. Ooru Sanam Thoongiruchu Song Lyrics has penned by Vaali.

படத்தின் பெயர்:மெல்ல திறந்தது கதவு
வருடம்:1986
பாடலின் பெயர்:ஊரு சனம் தூங்கிருச்சு
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:S ஜானகி

Ooru Sanam Thoongiruchu Lyrics in Tamil

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே

மயிலு இள மயிலு
மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே
என் மாமனே என் மாமனே

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா

நாளும் தவமிருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா

நிலா காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

Short Info

மெல்ல திறந்தது கதவு என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி இசை காதல் திரைப்படமாகும். இதில் மோகன், ராதா மற்றும் அமலா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ஆர்.சுந்தர்ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் 12 செப்டம்பர் 1986 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *