Nilavai Kondu Vaa Song Lyrics in Tamil

Nilavai Kondu Vaa Song Lyrics in Tamil from Vaali Movie. Indru Mudhal Iravu or Nilavai Kondu Vaa Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:வாலி
வருடம்:1999
பாடலின் பெயர்:நிலவை கொண்டு வா
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:உன்னி கிருஷ்ணன்,
அனுராதா ஸ்ரீராம்

பாடல் வரிகள்:

பெண்: நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

ஆண்: நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

பெண்: காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

ஆண்: காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

பெண்: இன்று முதல் இரவு
ஆண்: இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு

ஆண்: மெல்லவா உனை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

ஆண்: வரவா வந்து தொடவா
உன் ஆடைக்கு விடுதலை தரவா
பெண்: அவசரம் கூடாது
அனுமதி பெறும் வரையில்

பெண்: பொதுவா நா பெண்ணா
நீ சொன்ன படி கேட்கும் மாது
ஆண்: இது போன்ற விசயத்தில்
உன் பேச்சி உதவாது

பெண்: மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் துடிக்கையில் வெடிக்கையில்
முத்தங்கள் தருவாயா

ஆண்: போதுமா அது போதுமா
ஆசை தீருமா அம்மா
பெண்: அம்மா

பெண்: மாமா என் மாமா
இந்த நிலவை ஊதி அணைப்போமா
ஆண்: காணாத உன் கோலம்
கண்கொண்டு காண்கின்றதே

பெண்: இதழால் உன் இதழால்
என் வெட்கம் துடைத்துவிடுவாயா
ஆண்: அங்கத்தில் வெட்கங்கள்
எங்கெங்கு சொல்வாயா

பெண்: தேன் எங்கெங்கு உண்டு என்று
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல்
பேரின்பம் வாராதய்யா

ஆண்: இன்பமா பேரின்பமா
அது வேண்டுமா அம்மா
பெண்: அம்மா

பெண்: நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

ஆண்: நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

பெண்: காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

ஆண்: காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

பெண்: இன்று முதல் இரவு
ஆண்: இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு

ஆண்: மெல்லவா உனை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா
மெல்லவா உனை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *