Pathinettu Vayathu Ila Mottu Song Lyrics in Tamil from Suriyan Movie. Pathinettu Vayathu Ila Mottu Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | சூரியன் |
---|---|
வருடம்: | 1992 |
பாடலின் பெயர்: | பதினெட்டு வயது |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | S ஜானகி, SP பாலசுப்ரமணியம் |
பாடல் வரிகள்:
பெண்: பதினெட்டு வயது
இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு
ஏங்குது உறவாட
பெண்: கங்கை போலே
காவிரி போலே
ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு
செவ்வரி கண்ணு
ஜாடையில் கூறாதா
பெண்: பதினெட்டு வயது
இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
ஆண்: மாணிக்கத் தேரு
மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு
மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு
அந்தப் பாயைப்
போட்டுத்தான் உறங்கு
பெண்: நான் விட மாட்டேன்
தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு
இது கால தேவனின் கணக்கு
ஆண்: கூசுது உடம்பு
குலுங்குது நரம்பு
நீ என்னை உரசாதே
பெண்: கூச்சங்கள் எதுக்கு
ஆண்மகன் உனக்கு
நீ என்னை விலகாதே
பெண்: ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட
பாத்திரம் பக்கம் நெருங்கிட
விருந்திட ஆசை விடுமா
குழு: சும்மா நின்னா மாமனைக் கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா
தாமரை வெடிக்காதா
பெண்: மாங்கனிச் சாறும் செவ்விள நீரும்
மாங்கனிச் சாறும் செவ்விள நீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க
ஆண்: மூக்குத்திப் பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
பெண்: மன்மத பாணம்
பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு
ஆண்: மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
ஆண்: பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும்
நானும் விழுந்தேன்
குழு: மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ளை நீயாச்சு
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு
பெண்: பதினெட்டு வயது
இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு
ஏங்குது உறவாட