Adiye Adi Chinna Pulla Song Lyrics in Tamil from Sindhu Nathi Poo Movie. Adiye Adi Chinna Pulla Song Lyrics penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | சிந்து நதி பூ |
---|---|
வருடம்: | 1994 |
பாடலின் பெயர்: | அடியே அடி சின்னப்புள்ள |
இசையமைப்பாளர்: | சௌந்தர்யன் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | மனோ, S ஜானகி |
பாடல் வரிகள்:
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல
பெண்: அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
ஆண்: கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்
உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்
பெண்: உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்
ஆண்: கட்டிலில் ரெண்டு ஜீவன்கள்
துடித்தால் என்ன
கடலே உன்னை சூரியன்
குடித்தால் என்ன
பெண்: வாலிபம் தந்து நீ உருகினாய்
என் வாய் வழி ஜீவனை பருகினாய்
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல
பெண்: அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
பெண்: கதவினை மெல்லவே மூடினாய்
நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய்
ஆண்: புதையலை புடவையில் மூடினாய்
நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய்
பெண்: மன்மதா உன் மேகங்கள்
பொழிந்தால் என்ன
பெண் : மழையில் இந்த பூமியே
நனைந்தால் என்ன
ஆண்: தேவைகள் தினம் தினம் நீளட்டும்
என் தேவதை என்னையும் ஆளட்டும்
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல
பெண்: அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா
ஆண்: அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே