Mukunda Mukunda Song Lyrics in Tamil

Mukunda Mukunda Song Lyrics in Tamil from Dasavathaaram Movie. Mukunda Mukunda Song Lyrics has written in Tamil by Kavingar Vaali.

படத்தின் பெயர்:தசாவதாரம்
வருடம்:2008
பாடலின் பெயர்:முகுந்தா முகுந்தா
இசையமைப்பாளர்:ஹிமேஷ் ரேஷ்மானியா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:சாதனா சர்கம்

பாடல் வரிகள்:

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

வெண்ணை உண்ட வாயால்
மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல்
நோய்க்கு மருந்தாக வா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

என்ன செய்ய நானோ
தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும்
நூல் பாவைதான்

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

ஜெய ஜெயராம் ஜெய ஜெயராம்
ஜெய ஜெயராம் ஜெய ஜெயராம்
சீதா ராம் ஜெய ஜெயராம்
ஜெய ஜெயராம் ஜெய ஜெயராம்

நீ இல்லாமல் என்றும் இங்கே
இயங்காது பூமி
நீ அறியா சேதி இல்லை
எங்கள் கிருஷ்ண சுவாமி

பின் தொடர்ந்து அசுரர் வந்தால்
புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு
அவர் கணக்கை தீர்ப்பாய்

உன் ஞானம் போற்றிடாத
விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதை போலே
அஞ்ஞானம் ஏது

அன்று அர்ஜுனனுக்கு
நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க
உருகுகிறாளே இங்கே ஓர் கோதை

வாராது போவாயோ
வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு
என் ஜீவனே

ஜெய் முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

மச்சமாக நீரில் தோன்றி
மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி
பூமி தன்னை மீட்டாய்

வாமணன் போல் தோற்றம் கொண்டு
வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி
ஹிரணியனை கொன்றாய்

ராவணன் தன் தலையை கொய்ய
ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து
காதலும் தந்தாய்

இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும்
தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
ஏந்திழை ஏங்குகிறேனே

மயில்பீலி சூடி நிற்கும்
மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே
மணவாளனே

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

உசுரோடு இருக்கான்
நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே
வானத்தில் இருந்து
வந்து குதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே

ஆராவமுதா அழகா வாடா
உடனே வாடா வாடா
கோவிந்தா கோபாலா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா
பிருந்தாவனம் தா வனம் தா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *