Mathapoo Malai Katti Song Lyrics in Tamil from Ranga Movie. Mathapoo Malai Katti Song Lyrics has penned in Tamil by Vivek.
பாடலின் பெயர்: | மத்தாப்பு மாலை கட்டி |
---|---|
படத்தின் பெயர்: | ரங்கா |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | ராம் ஜீவன் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | மகாலிங்கம், பூஜா வைத்தியநாத் |
பாடல் வரிகள்:
ஆண்: மத்தாப்பு மாலை கட்டி
மேள தாளம் கண்ணானம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்
ஆண்: வாயார வந்த மக்க
வாழ்த்தி போகும் கோலாலம்
ஈரெட்டு செல்வம் சேர
வாழ வேணும் எந்நாளும்
குழு: ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்
குழு: ஏலேலம் ஏலேலம்
போட்டுக்க ஏலேலம்
கோலாலம் கோலாலம்
கும்மாளம் கோலாலம்
பெண்: நீ கட்டும் தாழி அள்ளி
மாரோட ஒட்டிப்பா
ஓன் ஆசை மட்டும் அள்ளி
மூச்சாக பொத்திப்பா
பெண்: கல்கண்டு பேசுக்காரி
காதோரம் தித்திப்பா
கட்டிக்க கிட்ட வந்தா
தானாவே சிக்கிப்பா
ஆண்: ஓ… ராசா வந்துட்டான்
பெண்: ஓ… ராணி வந்துட்டா
ஆண்: ஓ… ராசா வந்துட்டான்
பெண்: ஓ… ராணி வந்துட்டா
ஆண்: மத்தாப்பு மாலை கட்டி
மேள தாளம் கண்ணானம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்
ஆண்: கண்ணால கொஞ்சிப்பான்
பின்னால கட்டிப்பான்
அவன் மீசை முத்தம் வச்சி
உருக வைப்பான்
குழு: இரவில் காக்க வைப்பான்
விடிஞ்சா பூக்க வைப்பான்
பெண்: காணாத கனவையும் தீப்பான்
வேணும்னே அவகிட்ட தோப்பான்
ஆண்: தன நம்பி வந்த பொண்ணுக்கு
தான் துணை இருப்பான்
பெண்: அந்த ரங்கநாதன் போல
இவன் காத்து நிப்பான்
ஆண்: மத்தாப்பு மாலை கட்டி
மேள தாளம் கண்ணானம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்
குழு: ரங்கராஜனேய்
அன்பர் தங்கள் நேசனேய்
ரங்கராஜனேய்
அன்பர் தங்கள் நேசனேய்
குழு: ஆசைக்கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
ஆசைக்கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
குழு: அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
குழு: மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
பூ மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
பெண்: காதல்னா கிள்ளிப்பா
காய்சல்னா அள்ளிப்பா
போர்வைக்குள் அன்பகொட்டி
உறவாக்கிப்பா
ஆண்: கொழந்த போலிருப்பா
பெண்: குதிச்சா வாலறுப்பா
ஆண்: பாம்பாட்டம் சீறி சண்டை சேப்பா
பல்லிக்கே அஞ்சி கைய கோப்பா
பெண்: உன் சட்ட அள்ளி கையில்
வச்சு உறங்கிருப்பா
குழு: அதில் காலம் போற நீ
இருக்க வாங்கிருப்பா
ஆண்: மத்தாப்பு மாலை கட்டி
மேள தாளம் கண்ணானம்
காத்தாகும் காள வண்டி
ஊரே பாக்க ஊர்கோலம்