Nanbiye Song Lyrics in Tamil from Teddy Movie. Enthan Nanbiye Nanbiye Song Lyrics penned in Tamil by Madhan Karky and music by D.Imman.
பாடலின் பெயர்: | எந்தன் நண்பியே நண்பியே |
---|---|
படத்தின் பெயர்: | டெடி |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | டி.இமான் |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்: | அனிருத் ரவிச்சந்தர் |
பாடல் வரிகள்:
குழு: எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
ஆண்: எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
ஆண்: என்னை என்னை போலே
ஏற்றுக்கொண்டதாலே
எதிரொளியாகிடுவாயே
ஆண்: கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணையாகிட வந்தாயே
ஆண்: சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் காரணம் தந்தாயே
ஆண்: வண்ணங்கள் நானே
நீ தூரிகையே…
குழு: எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
ஆண்: எந்தன் மனம் பார்க்க
சொல்லவதெல்லாம் கேட்க
கிடைத்த ஒரு உயிர் துணை நீயே
குழு: நீயே…
ஆண்: என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே
குழு: அருந்துகிறாயே…
ஆண்: எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
குழு: கொன்றாயே…
ஆண்: நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யார் இந்த நான் என சொன்னாயே
செவ்வானம் நானே நீ அவந்திகயே
குழு: எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
குழு: இன்பியே… ஓ ஓ ஓ
நண்பியே… ஓ ஓ ஓ
ஆண்: மெய்நிகராட்டங்கள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்கலம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்
ஆண்: இணையா தொடரை
இணைந்தே மீகாந்தமே
அழுதால் உடனே
குழு: நீ துடைப்பாய்
ஆண்: மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும் போதே
தொடங்கும் எதையும்
குழு: நீ முடிப்பாய்
ஆண்: நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன்
வரையும் குறுநகையே
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே
குழு: நண்பியே
ஆண்: எனை திறக்கும் அன்பியே
குழு: அன்பியே
ஆண்: எந்தன் நண்பியே நண்பியே
குழு: நண்பியே
ஆண்: எனை இழுக்கும் இன்பியே
குழு: இன்பியே
குழு: நண்பியே… அன்பியே…
நண்பியே… நண்பியே…
சிறுகுறிப்பு:
டெடி என்பது சக்தி சவுந்தர் ராஜன் எழுதி இயக்கும் ஒரு தமிழ் படம். இந்த டெடி படத்தில் ஆர்யா மற்றும் சயீஷா சைகல் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன் கருணாகரன், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் அறிக