உள்ளமே உனக்குதான் | Ullame Unakkuthan Song Lyrics in Tamil

Ullame Unakkuthan Song Lyrics in Tamil from Gopura Deepam Movie. Ullame Unakkuthan Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:உள்ளமே உனக்குதான்
படம்:கோபுர தீபம்
வருடம்:1997
இசை:சௌந்தர்யன்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
அனுராதா ஸ்ரீராம்

Ullame Unakkuthan Lyrics in Tamil

ஆண்: உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும்
பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே

ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்

ஆண்: பார்த்ததும் இரண்டு விழியும்
இமைக்க மறந்துப்போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட
குயிலும் மறந்துப்போச்சு

பெண்: தொட்டதும் செவப்பு சேலை
இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேச வந்ததில்
பாதி மறந்துப் போச்சு

ஆண்: சுந்தரி உன்னையும் என்னையும்
பிரிச்ச காலம் போச்சு
பெண்: என் ராமனே உன்னை கண்டதும்
கிழக்கு வெளுக்கலாச்சு

ஆண்: உறவு தடுத்த போதும்
உயிர் கலந்தாச்சு
பெண்: உனக்கு சேர்த்து தானே
நான்விடும் மூச்சு

ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்

பெண்: மாமனே முயற்சி இருக்கு
உன்னையும் என்னையும் பிரிக்க
சிறுக்கி கேட்குறேன் குளத்து தண்ணியை
குடத்தில் எப்படி அடக்க

ஆண்: காதலி எழுதியிருக்கு
மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா கல்லு எழுத்த
காத்து வந்து அழிக்க

ஆண்: கண்ணனே உன்னை காண
உசிரு கிடந்து துடிக்க
அழகு ராணியே இதய துடிப்ப
எந்த தாவணி மறைக்க

பெண்: மனசு திறந்து பேச
மகிழ்ச்சி பிறக்க
ஆண்: மவுசு கூடி வந்து
கண்ணுபட படக்க

ஆண்: வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும்
பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே

பெண்: வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
ஆண்: இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
ஆண்: உன்னையும் என்னையும்
பிரிச்ச உலகமில்லையே
பெண்: தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே

Short Notes

உள்ளமே உனக்குத்தான்” என்ற பாடலானது 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “கோபுர தீபம்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ராமராஜன், சுகன்யா, சுந்தர் ராஜன், செந்தில், கோவை சரளா” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் திரைக்கதையினை ராமராஜன் எழுதி இயக்கியுள்ளார். அசோக் சாம்ராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

இதனை KB தயாளன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை L கேசவன் மேற்கொண்டுள்ளார்.

சௌந்தர்யன் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியை இசையமைக்க, வைரமுத்து பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

SP பாலசுப்ரமணியன், மனோ, ஸ்வர்ணலதா, KS சித்ரா, அனுராதா ஸ்ரீராம் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 15 ஜனவரி 1997 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் கோபுர தீபம் திரைப்படம் பற்றி அறிய Wikipedia.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *