Nira Nira Song Lyrics in Tamil

Nira Nira Song Lyrics in Tamil from Takkar Movie. Vizhiyile Oru Keerale or Nira Nira Song Lyrics has penned in Tamil by Ku.Karthik.

பாடலின் பெயர்: நிரா நிரா
படத்தின் பெயர்:டக்கர்
வருடம்:2023
இசையமைப்பாளர்:நிவாஸ் கே பிரசன்னா
பாடலாசிரியர்:கு.கார்த்திக்
பாடகர்கள்:சித் ஸ்ரீராம்,
கெளதம் வாசுதேவ் மேனன்,
மால்வி சுந்தரேசன்

Vizhiyile Oru Keerale Lyrics in Tamil

ஆண்1: நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வலி யுகம் விடா

ஆண்1: விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையைஅறியாமலே

ஆண்1: நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

ஆண்1: போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
என்னை தொண்டாதே திமிரே
பகல் வேசம் போடாதே

ஆண்1: உனை தீராமல் பிடிப்பேன்
உயிரின் உள்ளே மறைப்பேன்
வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…

ஆண்1: நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வலி யுகம் விடா

ஆண்1: நிரா… திரா…
நிரா திரா நிரா…

ஆண்2: நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்

ஆண்2: உருகி உருகி நீயும்
உளறிப்போன வார்த்தையாவும்
நியாபகத்தில் தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்

ஆண்2: உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகைப்படங்கள் கேட்டேன்

ஆண்2: உதடும் உதடும் உரசும்
உயிர்பறித்த சப்தம் யாவும்
பதிவு செய்து சேர்த்து வைத்த
இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்

ஆண்2: மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்
உந்தன் மூச்சு காற்று ஊத்தி போனாள்
பிழைத்திடுவேனடி

ஆண்2: தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தால் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒருமுறை கனவாய் கலைந்திடுமா

ஆண்1: உனை தீராமல் பிடிப்பேன்
உயிரின் உள்ளே மறைப்பேன்
வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…

பெண்: விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையைஅறியாமலே

பெண்: நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

பெண்: போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
என்னை தொண்டாதே திமிரே
பகல் வேசம் போடாதே

ஆண்1: வேசம் போடாதே

பெண்: உனை தீராமல் பிடிப்பேன்
உயிரின் உள்ளே மறைப்பேன்
வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…

பெண்: நிரா ஆண்1: நிரா
பெண்: நிரா ஆண்1: நிரா
பெண்: நீ என் ஆண்1: நீ என்
பெண்: நிரா ஆண்1: நிரா

பெண்: திரா ஆண்1: திரா
பெண்: திரா ஆண்1: திரா
பெண்: நினை ஆண்1: நினை
பெண்: திரா ஆண்1: திரா

பெண்: நொடி சுகம் தரா
ஆண்1: தரா
பெண்: வலி யுகம் விடா…
ஆண்1: விடா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *