Ennodu Vaa Perazhagi Song Lyrics in Tamil from Plan Panni Pannanum Movie. Ennodu Vaa Perazhagi Song Lyrics has penned by Niranjan Bharathi.
பாடலின் பெயர்: | என்னோடு வா பேரழகே |
---|---|
படத்தின் பெயர்: | பிளான் பண்ணி பண்ணணும் |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | நிரஞ்சன் பாரதி |
பாடகர்கள்: | ராஜகணபதி, ரம்யா NSK |
பாடல் வரிகள்:
ஆண்: என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
பெண்: ஓ… சுகம் தரும் பொய்யழகே
உயிர் தொடும் என்னவனே
நீ இல்லாமல் ஏதும் இல்லையே
ஆண்: உன் இருவிழி கலவரம் செய்து
சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்
எந்தநிலையிலும் எனக்கது வேண்டும்
இந்த இன்பம் போதும் எப்போதும்
ஆண்: நான் தேடி தேடி
தேடி தேடி பார்க்கிறேன்
என் நெஞ்சோரம் நீ வந்துபோன
வாசம் இன்னும் மீளுதே
ஆண்: என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
ஆண்: உன்னாலே நாளும் மாயங்கள்
இல்லாமல் போகும் நியாயங்கள்
தேனாக மாறி ஓடுமே நேரங்கள்
பெண்: ஒன்றாகிபோன சுவாசங்கள்
எண்ணங்கள் யாவும் காந்தங்கள்
பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்
ஆண்: காதலாகி காமமாகி
வாழ்க்கை ஆகினாய்
நீங்கிடாத மோகம் தந்து
கைதி ஆக்கினாய்
ஆண்: எந்தன் சூழல் சொர்க்கமாகும்
உன்னை கண்டாலே
ஆண்: நான் தேடி தேடி
தேடி தேடி பார்க்கிறேன்
என் நெஞ்சோரம் நீ வந்துபோன
வாசம் இன்னும் மீளுதே
பெண்: நான் தேடி தேடி
தேடி தேடி பார்க்கிறேன்
என் நெஞ்சோரம் நீ வந்துபோன
வாசம் இன்னும் மீளுதே
ஆண்: என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே