Malai Kaatru Vanthu Song Lyrics in Tamil from Vedham Movie. Malai Kaatru Vanthu Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | வேதம் |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | மழைக்காற்று வந்து |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஹரன், மகாலக்ஷ்மி ஐயர் |
Malai Kaatru Vanthu Lyrics in Tamil
ஆண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
பெண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மலைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்
பெண்: புல்லோடு இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே தூங்காது நமது தீபமே
ஆண்: கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே
முடியாது அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே முடியாது நமது பந்தமே
பெண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து இசை பாடுமா
ஆண்: மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
ஆண்: இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
பெண்: கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வது அறியேன்
இனி என்ன ஹ்ம்ம்…
ஆண்: மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி