Konja Naal Poru Thalaivaa Song Lyrics in Tamil from Aasai Movie. Konja Naal Poru Thalaivaa Song Lyrics has penned in Tamil by Vaali.
Konja Naal Poru Thalaivaa Lyrics in Tamil
ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண்: காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ
எந்த ஊரோ நானறியேன்
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
ஆண்: ஓ நேத்துக்கூட தூக்கத்தில
பாா்த்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோா்த்துவெச்ச மாலை போல
ஆண்: வோ்த்துக்கொட்டி
கண்முழிச்சுப் பாா்த்தா
அவ ஓடிப்போனா
உச்சிமலக் காத்தா
ஆண்: சொப்பனத்தில் இப்படிதான்
எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில்
சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே
காதல் தீயப் பத்தவெப்பா
ஆண்: தேனாறு பாலாறு
போல வந்தா கண்ணுக்குள்ள
தேசிய கொடி போல
குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
பெண்: பச்சை தாவணி பறக்க
அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே
என் மாமன் கண்ணு தூங்கலையே
ஆண்: என்னோடுதான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும் பார் தென்றல் சாட்சி
ஆண்: சிந்தனையில்
வந்து வந்து போறா
அவ சந்தனத்தில்
செஞ்சு வெச்ச தேரா
ஆண்: என்னுடைய காதலிய
ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச
வண்ண வண்ணச் சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசு சத்திரமா
ஆண்: ஆத்தாடி அம்மாடி
என்ன சொல்ல கட்டழகா
ஆவாரம் பூவாக
வாய் வெடிச்ச மொட்டழகா
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போா் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண்: காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ
எந்த ஊரோ நானறியேன்
குழு: ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி
Short Notes
“கொஞ்ச நாள் பொறு தலைவா” என்ற பாடலானது 1995 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஆசை” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “அஜித் குமார், சுவலக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், ரோகினி” ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையினை வசந்த் எழுதி இயக்கியுள்ளார். மணிரத்னம், S ஸ்ரீராம் இதனை தயாரிக்க ஆலயம் நிறுவனத்தின் கீழ் இப்படம் உருவானது.
இதனை ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை B லெனின், VT விஜயன் இருவரும் மேற்கொண்டுள்ளார்.
தேனிசை தென்றல் தேவா திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
வாலி, வைரமுத்து இருவரும் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.
ஹரிஹரன், SP பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா, அனுராதா ஸ்ரீராம் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.
இத்திரைப்படம் 09 செப்டம்பர் 1995 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ஆசை திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.
Nice line is perfect 👍👌