Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Kokkarakko Seval Onnu Song Lyrics

Kokkarakko Seval Onnu Song Lyrics in Tamil from Murugan Songs. Kokkarakko Seval Onnu Song Lyrics has sung in Tamil by Pushpavanam Kuppusamy.

Kokkarakko Seval Onnu Song Lyrics

ஓம் என்னும் மாத்திரத்தில்
ஆளும் வேலன்
ஊதும் உள்ளத்தில் நின்று
ஆடும் வேலன்

வேலன் வேலன்
ஓம் வேலன் வேலன்
வேலன் வேலன்
ஓம் வேலன் வேலன்

கந்தனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேல் வேல் வேல் வேல்

கொக்கரக்கோ சேவல் ஒன்னு
என்ன சொல்லி கூவுது
வேல் வேல் வேல் வேல்
வேல்முருகா வேல் வேல்

கொக்கரிச்சு நிக்கும்போது
என்ன பேரு கூறுது
வேல் வேல் வேல் வேல்
வேல்முருகா வேல் வேல்

மனமே படைவீடு நீ தேடிவா
என செய்தி அது கூறி
சுத்தி வருகுது சுத்தி வருகுது
முத்துவேலை சுத்தி சுத்தி
முக்தி அடையுது
சக்தி வருகுது சக்தி வருகுது
தங்கவேலை சுத்தி சுத்தி
தஞ்சம் அடையுது

திருநீறு பூசிக்கொள்ளும்
தேய்வானை மன்னாவை
திருப்பரங்குன்றத்திலே
காண்போம் ஐயா

கந்தனுக்கு வேல் வேல்
கடம்பனுக்கு வேல் வேல்
முருகனுக்கு வேல் வேல்
குமரனுக்கு வேல் வேல்

அலைபாயும் கடலோரம்
சம்கார வடிவேலை
செந்தூரில் நாம் காண
செல்வோம் ஐயா

பழனி மலையில்
பழமாகி நின்றான்
அழகன் முருகன்
அறிவோம் ஐயா

சுவாமி மலை தணிகை மலை
பழமுதிரும் சோலை மலை
உலவுகின்ற மயில் அழகை
காண்போம் ஐயா

கந்த சஷ்டி என்னும்
காக்கும் கவசம் அதை
கூறும்போது சுகமே
கூறும்போது சுகமே

சஷ்டி சண்முகனை
போற்றும் திருப்புகழை
ஆடிபாடும் மனமே
ஆடிபாடும் மனமே

வந்த கஷ்டங்களை
தீர்க்கும் தெய்வம் அதை
தேடும்போது நலமே
தேடும்போது நலமே

வெற்றி வடிவேலை
பற்றி பிடித்தோரை
கூடும் கோடி ஜெயமே

சுத்தி வருகுது சுத்தி வருகுது
முத்துவேலை சுத்தி சுத்தி
முக்தி அடையுது
சக்தி வருகுது சக்தி வருகுது
தங்கவேலை சுத்தி சுத்தி
தஞ்சம் அடையுது

குறவஞ்சி கொடியோடு
கதை பேசும் வடிவேலை
குன்றக்குடி ஏறி
பணிவோம் ஐயா

அப்பனுக்கு வேல் வேல்
குப்பனுக்கு வேல் வேல்
ஐயனுக்கு வேல் வேல்
அழகனுக்கு வேல் வேல்

திருவாணி நதியோடு
கைவீசும் கதிர்வேலை
மருதமலை மேலே
பார்ப்போம் ஐயா

பள்ளி மலையில்
பல வேலன் நின்றான்
கள்ளத்தனம் ஏன்
நீ கேள்ளய்யா

சுருளி மலை சென்னி மலை
வரம் அருளும் விராலிமலை
முருகனுக்கு காவடிகள்
சேர்ப்போம் ஐயா

தங்க தாமரையில்
பூக்கும் புன்னகையை
காண கோடி தவமே
காண கோடி தவமே

சின்ன பாதம் அதில்
ஆடும் மணிச்சலங்கை
வேதமாகி வருமே
வேதமாகி வருமே

கந்த மாமயிலும்
காட்டும் கழிநடனம்
காண கூடு தினமே
காண கூடு தினமே

கந்த மாமருகன்
வாழும் தளம் அடைந்து
நாடி கேளு வரமே

கொக்கரக்கோ சேவல் ஒன்னு
என்ன சொல்லி கூவுது
வேல் வேல் வேல் வேல்
வேல்முருகா வேல் வேல்

கொக்கரிச்சு நிக்கும்போது
என்ன பேரு கூறுது
வேல் வேல் வேல் வேல்
வேல்முருகா வேல் வேல்

மனமே படைவீடு நீ தேடிவா
என செய்தி அது கூறி
சுத்தி வருகுது சுத்தி வருகுது
முத்துவேலை சுத்தி சுத்தி
முக்தி அடையுது
சக்தி வருகுது சக்தி வருகுது
தங்கவேலை சுத்தி சுத்தி
தஞ்சம் அடையுது

கந்தனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேல் வேல் வேல் வேல்

குமரனுக்கு அரோகரா
வேந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
வேல் வேல் வேல் வேல்
வேல்….


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.