Pagai Kadithal Lyrics has penned in Tamil by Sri Pamban Swamigal. Pagai Kadidhal or Pagai Kadithal Lyrics in Tamil from Lord Murugan Songs.
Pagai Kadithal Tamil Lyrics
திருவளர் சுடர் உருவே
சிவைகரம் அமர் உருவே
அருமறை புகழ் உருவே
அறவர்கள் தொழும் உருவே
இருள்தபும் ஒளி உருவே
எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே
கொணர்தியுன் இறைவனையே
மறைபுகழ் இறைமுனரே
மறைமுதல் பகர் உருவே
பொறைமலி உலகு உருவே
புனநடை தரும் உருவே
இறையிள முக உருவே
எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே
கொணர்தியுன் இறைவனையே
இதரர்கள் பலர் பொரவே
இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர்
வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே
தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே
கொணர்தியுன் இறைவனையே
பவநடை மனுடர்முனே
படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர்
நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே
திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே
கொணர்தியுன் இறைவனையே
அழகுறு மலர் முகனே
அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே
மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே
எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே
கொணர்தியுன் இறைவனையே
இணையறும் அறுமுகனே
இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே
எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே
கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே
கொணர்தியுன் இறைவனையே
எளிய என் இறைவ குகா
எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன்
மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா
பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே
கொணர்தியுன் இறைவனையே
இலகயில் மயில்முருகா
எனநினை எனதெதிரே
பலபல களமணியே
பலபல பதமணியே
கலகல கல எனமா
கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே
கொணர்தியுன் இறைவனையே
இகலறு சிவகுமரா
எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார்
சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே
சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே
கொணர்தியுன் இறைவனையே
கருணைபெய் கனமுகிலே
கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே
அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே
மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே
கொணர்தியுன் இறைவனையே