Kannadasa Kannadasa Varuvaya Song Lyrics

Kannadasa Kannadasa Varuvaya Song Lyrics in Tamil from Thavam Movie. Kannadasa Kannadasa Varuvaya Song Lyrics in Tamil by Thabu Shankar.

படத்தின் பெயர்:தவம்
வருடம்:2007
பாடலின் பெயர்:கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
இசையமைப்பாளர்:டி.இமான்
பாடலாசிரியர்:தபு சங்கர்
பாடகர்கள்:மகாலக்ஷ்மி ஐயர்

பாடல் வரிகள்:

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா
என்னை மெச்சு மெச்சு
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

நீ இல்லாமலே நான் உனை காதலிக்கிறேன்
இதை சொல்லாமலே நான் உனை காதலிக்கிறேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்

நான் உனை காதலிக்கிறேன்
மனிதர்கள் உறங்கும் நேரத்தில்
தேவதையாய் திரிந்தே
நான் உனை காதலிக்கிறேன்
உனை காதலிக்கிறேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவி ஆகி கொண்டேன்

நான் இங்கு காத்திருக்கிறேன்
காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே
நான் இங்கு காத்திருக்கிறேன்
இங்கு காத்திருக்கிறேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா
என்னை மெச்சு மெச்சு
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *