Manjalile Neeradi Song Lyrics in Tamil

LR Eswari’s Manjalile Neeradi Song Lyrics in Tamil. Malayanur Angaliye Song Lyrics. Manjalile Neeradi Song Lyrics from 108 Amman Paadalgal.

பாடல் வரிகள்:

மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா

உடுக்கை பம்பை முரசொலிக்க
உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா

மேல் மலையனூரில் கோயில் கொண்ட
என் அங்காள ஈஸ்வரியே
ஆத்தாளே அழைக்கின்றேன்
ஆடி இங்கு வந்திடம்மா
நீ வந்திடம்மா

மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே

குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே

குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே

சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
தேரோடும் வீதியிலே
தாயே நீயாடி வந்திடம்மா

அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே
நீ அழகாக வருபளே அம்மம்மா

மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அமம்மா

மலையனூரு அங்காளியே
மாங்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே

ஆலய வாசலிலே
அலங்காரத் தோரணமாம்
அங்காள ஈஸ்வரிக்கு
அபிஷேக பூஜைகளாம்

ஆடிவரும் தேரினிலே
அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா
ஆயிரம் கண்கள் கொண்டவளே
எங்க அங்காள ஈஸ்வரியே

திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
மாவிளக்கின் ஒளியினிலே
தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா

மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா

மலையனூரு அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வாடியம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா

மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா

மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *