Hey Chaka Chakkalathi Song Lyrics in Tamil

Hey Chaka Chakkalathi Song Lyrics in Tamil from Galatta Kalyanam or Atrangi Re Movie. Hey Chaka Chakkalathi Song Lyrics penned by Yugabharathi

பாடல்:ஹே சக்க சக்களத்தி
படம்:கலாட்டா கல்யாணம்
வருடம்:2021
இசை:AR ரஹ்மான்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:ஸ்ரேயா ஹோசல்

Hey Chaka Chakkalathi Lyrics in Tamil

ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

தட தட தடவென தரையில நடந்தவ
கனவுல மிதந்திட கனிஞ்சே வா
சட சட சடவென கதைகள அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா

உசுரு பளிங்கு போல் உருட்டிடவா
உலக உருண்டைய பொரட்டிடவா
தொடாத ஆசை திரி தூண்ட
மாமன் மனச மிரட்டிடவா

ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

செங்காந்தள் உதடு இன்னுமே இன்னுமே
ஏங்காதோ தேன் ஊற
சிங்கார வலையில் சத்தமே சத்தமே
போடாதோ ஈடு ஏற

காணாததை கண்டேவிட
இரு கண்களும் பேசுவது ஏதோ
செல்லமென கொஞ்சினாலும்
கொஞ்சம் போல மிஞ்சினாலும்
கூடாதோ காதலே

ஹே சக்க சக்களத்தி குயிலே வா
நாணத்த தேகத்தில மறச்சே வா
ஹே சக்க சக்களத்தி மயிலே வா
ஏக்கத்த தீர்த்து கொள்ள நெனச்சே வா

வெள்ளியில தெரியல விவரமும் புரியில
பொசுக்குன்னு விடியுற கிழக்கே வா
உடையில நடையில உருளுல அழகுல
வரவுல பெருகுற கணக்கே வா

உறவு கயிறையும் திரிச்சே வா
உலகம் மறந்து நீ சிரிச்சே வா
விடாத வெட்கம் வெளியேற
வேர்வை பாடம் படிச்சே வா

ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

தட தட தடவென தரையில நடந்தவ
கனவுல மிதந்திட கனிஞ்சே வா
சட சட சடவென கதைகள அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா

உசுரு பளிங்கு போல் உருட்டிடவா
உலக உருண்டைய பொரட்டிடவா
தொடாத ஆசை திரி தூண்ட
மாமன் மனச மிரட்டிடவா

ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா

1 thought on “Hey Chaka Chakkalathi Song Lyrics in Tamil”

  1. தேன் நிலா பால் நிலா அமுதை பொழியும் நிலவே ஆயிரம் நிலவே என்றெல்லாம் ஆயிரம் விதமாக நிலவை வர்ணித்த கவிஞர்கள் மத்தியில் நிலவை சக்களத்தி என அழைத்து பாடல் வரிகள் எழுதிய உங்கள் துணிச்சல் பாராட்டிற்குரியது யுகபாரதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *