Entha Desathil Song Lyrics in Tamil

Entha Desathil Song Lyrics in Tamil from Priyamana Thozhi. Entha Desathil Desathil Nee Piranthai Song Lyrics penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:பிரியமான தோழி
வருடம்:2003
பாடலின் பெயர்:எந்த தேசத்தில்
இசையமைப்பாளர்:SA ராஜ்குமார்
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:ஹரிஹரண்

Entha Desathil Lyrics in Tamil

எந்த தேசத்தில் தேசத்தில்
நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா

எந்த தேசத்தில் தேசத்தில்
நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்
நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா

ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்
இதயம் தன்னில்

நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்

எந்த தேசத்தில் தேசத்தில்
நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா

வண்ண வண்ண பூவெல்லாம்
வாசம் வீசி பூ பூக்கும்
உன்னை போல ஒன்றுக்கும்
வாசம் வீச தெரியாதே

கோடி கோடி வார்த்தைகள்
கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல்
அர்த்தம் எதிலும் கிடையாதே

ஓ அழகே நீ வாய் பேச
கீதம் என்பேனே
சங்கீதம் என்பேனே
பேசாத மௌனத்தை
கவிதை என்பேனே
புது கவிதை என்பேனே

கடல் ஓரம் நீயும் வந்தால்
புயல் வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம்

எந்த தேசத்தில் தேசத்தில்
நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா

உந்தன் கண்கள் ஓரத்தில்
தீட்டி வைத்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐந்நுாறு
காப்பியங்கள் உண்டாகும்

உந்தன் கூந்தல் ஈரத்தை
தொட்டு போன காற்றைதான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால்
எந்தன் வாழ்வில் வரமாகும்

ஓ அன்பே உன் இதழைதான்
சிறைகள் என்பேனே
பனி சிறைகள் என்பேனே
மெலிதான இடையைதான்
பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே

அடி அன்னபறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன்

எந்த தேசத்தில் தேசத்தில்
நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில்
நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா

ஏதோ ஒரு மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம் ஏற்றம்
இதயம் தன்னில்

நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *