Penne Neeyum Penna Song Lyrics in Tamil from Priyamana Thozhi Movie. Penne Neeyum Penna Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
படத்தின் பெயர்: | பிரியமான தோழி |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | பெண்ணே நீயும் பெண்ணா |
இசையமைப்பாளர்: | SA ராஜ்குமார் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | உன்னி மேனன், கல்பனா ராகவேந்தர் |
Penne Neeyum Penna Lyrics in Tamil
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
ஆண்: ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பனிபூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
ஆண்: பிரம்மன் செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்போது தான்
மொழிகள் இனிக்கிறது
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
ஆண்: புறா இறகில் செய்த
புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று
உனக்கு தெரியுமா
பெண்: சீன சுவரை போலே
எந்தன் காதல் கூட
இன்னும் நீளமாகும்
உனக்கு தெரியுமா
ஆண்: பூங்கா என்ன வாசம் என்று
உந்தன் மீது தெரியும்
பெண்: தந்தம் என்ன வண்ணம் என்று
உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
ஆண்: கம்பன் ஷெல்லி சேர்ந்துதான்
கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்துதான்
பெண்ணாய் நிற்கிறது
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
பெண்: மழை வந்த பின்னால்
வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால்
மழை தோன்றுதே
ஆண்: பூக்கள் தேடி தானே
பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு
பூக்கள் பறந்ததே
பெண்: மின்னும் விந்தை என்ன என்று
மின்னல் உன்னை கேட்கும்
ஆண்: எங்கே தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம்
கையெழுத்து கேட்டு நிற்கும்
பெண்: நீ தான் காதல் நூலகம்
சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை
நனைவேன் பாத்திரமாய்
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
பெண்: அரை நொடிதான் என்னை பார்த்தாய்
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்
பனி துளியாய் நீயும் வந்தாய்
பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்
ஆண் : பிரம்மன் செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போதுதான்
மொழிகள் இனிக்கிறது