என்ன பெத்த அம்மாவே | Enna Petha Ammave Song Lyrics in Tamil

Enna Petha Ammave Song Lyrics in Tamil from Rudhran Movie. Enna Petha Ammave Song Lyrics has penned in Tamil by Madhurakavi.

பாடல்:என்ன பெத்த அம்மாவே
படம்:ருத்ரன்
வருடம்:2023
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:மதுரகவி
பாடகர்:GV பிரகாஷ் குமார்

Enna Petha Ammave Lyrics in Tamil

என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச உன் மவன

என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச உன் மவன

பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கெடக்கியே

தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே

உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கெடக்கியே

கருவில் தாங்கி
கனவில் ஏங்கி
கதறி ஈன்ற
தியாக உருவமே

சில நொடி பிடிச்சி
பிஞ்சு மனம் பொதச்சி
உன் நிழலில் நடிக்க
மறு ஜென்மம் தோன்றுமா

ஊராரு மெச்ச உன்ன
நான் அழ வைக்க தான
ஏழேழு கடலும் தாண்டி வந்தேன்

மூச்சோடு மல்லுகட்டி
என்ன பெத்தவளே
முந்தான கூண்டில் வச்சி
பாதுகாத்தவளே

தானக துடிச்ச நெஞ்சு
என்ன நினைச்சதோ
கைமாறு என்ன செஞ்சு
பாவம் தீர்க்கவே

என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே

தகப்பன் தோள்கள்
தாங்கிட இல்லையே
தாயின் மடியும்
தூங்க இல்லையம்மா

தன்னந்தனி மரமா
நிக்க வச்ச நீயே
தாய் இழந்த மகனா
பாட வச்சிட்டியே

தாயே உன் கதகதப்பில்
பனிக்குட வெது வெதுப்பில்
நான் வாழ பிறவி வாய்க்குமா

ஊர் கூடி தேர் இழுத்தும்
தெய்வம் காணவில்லை
முக்கோடி செல இருந்தும்
தாய மிஞ்சவில்லை

பேராடி சொத்து சேர்த்தும்
இன்பம் சேரவில்லை
தாயே நீ இல்லாமத்தான்
மோட்சம் எனக்கில்லை

என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச உன் மவன

என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச உன் மவன

பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கெடக்கியே

தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே

உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கெடக்கியே

Short Notes

என்ன பெத்த அம்மாவே” என்ற பாடலானது 2023 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ருத்ரன்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையினை KP திருமாறன் எழுத, S கதிரேசன் தனது ” Five Star Creations” நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கியுள்ளார்.

இதனை RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை அந்தோணி மேற்கொண்டுள்ளார்.

சாம் CS திரைப்படத்தின் பின்னணியை இசையமைத்துள்ளார். GV பிரகாஷ் குமார், தரன் குமார், ofRo ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

கண்ணதாசன், கபிலன், கருணாகரன், அசல் கோலார் ஆகியோர் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடராமன், Emcee D, திவாக்கர், சித் ஸ்ரீராம், அசல் கோலார் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது தமிழ் புத்தாண்டு தினமான 14 April 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ருத்ரன் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *